இயக்குனராகவும் மாறினார் ஜேம்ஸ் வசந்தன்

204

சின்னத்திரையில் விரும்பி பார்க்கப்படும் தொகுப்பாளராக இருந்த ஜேம்ஸ் வசந்தன் திடீரென சினிமாவில் இசையமைப்பாளராக மாறியபோது அதிலும் ‘சுப்ரமணியபுரம்’ என்ற சூப்பர்ஹிட் படத்தில் அருமையான பாடல்களை கொடுத்தபோது அவரது அந்த புதிய அவதாரம் ரசிகர்களுக்கு ஏற்படுத்திய வியப்பு அடங்க வெகு நாட்களானது.

தொடர்ந்து ஏழு வருடங்களாக இசையமைத்து வந்தவர் தற்போது ‘வானவில் வாழ்க்கை’ என்ற படத்தை இயக்குவதன் மூலமாக டைரக்ஷன் துறையிலும் கால் பதித்து இன்னொரு ஆச்சர்யத்தை தந்திருக்கிறார். கல்லூரி வாழ்க்கையில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளை மையமாகக்கொண்டு உருவாகும் இந்தப்படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க இருக்கிறார்கள்.

இதற்கான ஹீரோ, ஹீரோயின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப்பட்த்தில் ஜாஸ், ஹிப்பாப், கானா, கர்நாடகம், நாட்டுபுறம் என பல ஜானர்களில் மொத்தம் 19 பாடல்கள் இடம்பெறுகிறது. இதில் ஒரு புதிய முயற்சியாக 1940களில் வந்த பழைய படங்களைப்போல இதில் நடிப்பவர்களே பாடல்களை பாடும் முறையை மீண்டும் கொண்டுவந்து இதை ஒரு இன்னிசை சித்திரமாக உருவாக்க இருக்கிறாராம் ஜேம்ஸ் வசந்தன்.

Comments are closed.