“ஜல்லிக்கட்டு நடத்தவேண்டும்” ; கமல் அதிரடி..!

302

kamal-jallikatu

சினிமாவை பொறுத்தவரை அதன் அட்வான்ஸ் டெக்னாலஜிகளை முதல் ஆளாக கற்றுக்கொண்டு தனது படங்களில் பயன்படுத்தினாலும், அதே அளவுக்கு பாரம்பரியமான பழைய விஷயங்களிலும் ஒரு கண் வைத்திருப்பார் உலக நாயகன் கமல்ஹாசன்.. அவற்றுக்கு ஏதாவது ஒரு சிக்கல் வரும்போது கமலின் குரல் ஓங்கி ஒலிக்க தவறுவதே இல்லை..

அந்தவகையில் ஜல்லிக்கட்டு கட்டாயம் நடத்தவேண்டும் என உறுதியாக தனது கருத்தை பதிவுசெய்துள்ளார் கமல்.. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மிருகவதை என்று கூறினால், நம்மவர்கள் பிரியாணி தின்பதற்கும் அல்லவா தடை விதிக்கவேண்டும்.. பாவம் வாயில்லா ஜீவன் என சொல்லிவிட்டு அதில் இரட்டை நிலைப்பாடு எதற்கு என காரசாரமாக கூறியுள்ளார் கமல்..

சிம்பு, விஜய்சேதுபதி, சூர்யா உள்ளிட்டவர்களும் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்துவரும் நிலையில் கமலின் குரலும் அதற்கு வலு சேர்ப்பதாகவே இருக்கும்.

Comments are closed.