‘ஜாக்சன் துரை’ ட்ரெய்லரை வெளியிட்டார் ஜெயம் ரவி..!

224

Jackson Durai Trailer

‘போக்கிரி ராஜா’ படத்தை தொடர்ந்து சிபிராஜ நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் ‘ஜாக்சன் துரை’.. இன்று வாரத்துக்கு ஒரு பேய்ப்படங்கள் வருவது வாடிக்கையாகிவிட்டது.. ஆனால் இந்தப்படம் பேய்க்கதை தான் என்றாலும் இதை வித்தியாசமான கதைக்களத்தில் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் தரணிதரன்.

அதனால் இந்தப்படம் தயாரிப்பில் இருந்தபோதே இதை வெளியிடும் உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கியது. சத்யராஜ் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தப்படத்தில் பிந்துமாதவி கதாநாயகியாக நடித்துள்ளார். சிபிராஜுடன் காமெடி கூட்டணி அமைத்துள்ளார் கருணாகரன்.. இந்தப்படத்தின் ட்ரெய்லரை நேற்று மாலை ஜெயம் ரவி வெளியிட்டுள்ளார்.

Comments are closed.