
தரமான படங்களை தயாரித்து வெளியிடும் ஜே.எஸ்.கே பிலிம்ஸ் நிறுவனம் நல்ல படங்களை வெளியிடுவதன் மூலம் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு இந்திய அரங்கில் மட்டுமல்லாது உலக அரங்கில் தமிழ்சினிமாவுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்து வருகிறது. அந்த வகையில் ‘சிறந்த தமிழ்ப்படம்’ என்கிற பிரிவில் தேசிய விருது வாங்கித்தந்து ஜே.எஸ்.கேவிற்கு பெருமை சேர்த்திருக்கிறது ‘குற்றம் கடிதல்’ படம்.
இந்தப்படத்தை தயாரித்துள்ளவர் வெளிநாட்டில் வாழும் இந்தியரான கிறிஸ்டி. படத்தை கிறிஸ்டி தயாரித்தலும் அந்தப்படத்தை ஜே.எஸ்.கே பிலிம்ஸ் அந்தப்படத்தை வாங்கியது தான் அந்தப்படக்குழுவினர் செய்த அதிர்ஷ்டம். இல்லையில்லை அந்தப்படம் செய்த அதிர்ஷ்டம்.. அந்தவகையில் அவரது ராசியோ என்னமோ இந்தப்படம் வெளியாகும் முன்னரே ஜிம்பாப்வே திரைப்பட விழா, மும்பை திரைப்பட விழா, இந்தியன் பனோரமா, பெங்களூரு, கோவா, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களிலும் அங்கீகாரம், மற்றும் கௌரவத்தையும் பெற்றுள்ளது.
இதோ, இப்போது தேசிய விருது கிடைத்ததன் மூலம் அளவற்ற மகிழ்ச்சியில் திளைக்கிறது ஜே.எஸ்.கே பிலிம்ஸ்.. ஐந்து பல்வேறு வாழ்க்கை தரத்தை சேர்ந்த மக்களின் ஒரு நாள் வாழ்க்கை, அந்த ஒரு நாளில் ஏற்படும் சம்பவம், அதன் அடிப்படையில் வாழ்க்கையில் ஏற்படும் குழப்பங்களை சித்தரிக்கும் கதைதான் இந்த ‘குற்றம் கடிதல்’. இந்தப்படத்தை இயக்கியுள்ளவர் அறிமுக இயக்குனரான பிரம்மா.
Comments are closed.