தெலுங்கில் ரீமேக் ஆகும் ‘இவன் தந்திரன்’..!

231

Ivan-Thanthiran
இவன் தந்திரன் என்கிற ஒரு நல்ல படத்தை கொடுத்துவிட்டு அதை நினைத்து திருப்திப்பட முடியாமல் கடந்தவாரம் முழுதும் திக்பிரம்மை பிடித்துப்போயிருந்தார் இயக்குனர் ஆர்.கண்ணன். காரணம் திரையரங்கு உரிமையாளர்கள் திடீரென அறிவித்த ஸ்ட்ரைக்கால் படத்தின் வசூல் பாதித்தது.. ஸ்ட்ரைக் முடிந்து அடுத்தவாரமும் கூட இந்த படம் தியேட்டரில் தொடர்ந்து ஓட ஆரம்பித்ததும் தான் நிம்மதி பெருமூச்சு விட்டார் இயக்குனர் ஆர்.கண்ணன்.. பின்னே படத்தின் தயாரிப்பாளரும் இவர் தானே..?

இப்போது அவருக்கு தெம்பு தரும் விதமாக ‘இவன் தந்திரன்’ படம் தெலுங்கிலும் ரீமேக் ஆகவிருக்கிறது. இதையும் ஆர்.கண்ணனே இயக்கவுள்ளாராம். தெலுங்கில் நடிக்கும் நடிகர் நடிகை பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது..

Comments are closed.