இறைவி’க்கு 300 ; ‘குற்றமே தண்டனை’க்கு 1000..!

203

iraivi vs kutrame thandanai
பிச்சைகாரன் படம் ஹிட்டானதன் பின்னணியில் பல காரணங்கள் சொல்லப்பட்டன. அதில் முக்கியமான ஒன்றுதான் விளம்பர யுக்தி.. பிச்சைகாரன் படத்தை வெளியிட்டதன் மூலம் மற்றவர்களின் கவனம் ஈர்க்கும் வெளியீட்டு நிறுவனமாக வளர்ந்துள்ளது கே.ஆர்.பிலிம்ஸ் நிறுவனம். சமீபத்தில் வெளியான இறைவி படத்தையும் இவர்கள் தான் ரிலீஸ் செய்துள்ளனர்.

இதில் ‘இறைவி’ படத்தின் விளம்பர யுக்திகளில் ஒன்றாக 300 ஆட்டோக்களில் எல்.சி.டி மானிட்டர் பொருத்தினார்கள்.. ஆட்டோ ஸ்டார்ட் ஆனதும் படத்தின் ட்ரெய்லர் பாடல்கள் என ஓடத்தொடங்கும்.. அதுவே ஆட்டோவில் பயணிப்பவர்கள் மூலமாக படத்திற்கு ஒரு பப்ளிசிட்டியாக அமைந்தது..

இதை தொடர்ந்து காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குற்றமே தண்டனை’ படத்தையும் கே.ஆர்.பிலிம்ஸ் நிறுவனம் தான் வெளியிட இருக்கிறது. இந்தப்படத்திற்கு சுமார் 1000 ஆட்டோக்களில் எல்.சி.டி மானிட்டர் பொருத்தி மிக பிரமாண்டமாக படத்தை விளம்பரப்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்களாம்.

Comments are closed.