’இப்படை வெல்லும் ஷூட்டிங்ஸ்பாட்டில் குழப்பம் ஏற்படுத்திய உதயநிதி-சூரி..!

232

Ippadai Vellum Press Meet Stills

கௌரவ் நாராயணன் டைரக்சனில் உதயநிதி, மஞ்சிமா மோகன், சூரி ஆகியோர் நடித்துள்ள படம் ‘இப்படை வெல்லும்’.. இந்தப்படம் வரும் நவ-9ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.. இதனையொட்டி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசிய கௌரவ் நாராயணன், இந்தப்படத்தின் படப்பிடிப்பின்போது உதயநிதியும் சூரியும் பண்ணிய குழப்பங்களை உண்டாக்கிய கதையை பகிர்ந்துகொண்டார்..

அதாவது இந்தப்படம் ஒப்பந்தமான சமயத்திலே அடுத்ததாக சரவணன் இருக்க பயமேன், பொதுவாக எம் மனசு தங்கம் ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடிக்க ஆரம்பித்து விட்டார். கூட இரண்டு படங்களிலும் காமெடியனாக சூரியும்.. அதனால் இடையே நடைபெற்ற ‘இப்படை வெல்லும்’ படத்தின் ஷூட்டிங் நடந்தபோது, இருவரும் சரவணன், ‘டைகர்’ என தாங்கள் நடித்த சரவணன் இருக்க பயமேன் படத்தில் தங்களது கேரக்டர்களின் பெயர்களை சொல்லி அழைத்துக்கொண்டார்களாம்.

இதனைப்பார்த்த இயக்குனர் கௌரவ், “என்னடா இது சோதனை, அந்தப்படத்தின் பாதிப்பில் இருந்து இவர்கள் இன்னும் விலகாமல் இருக்கிறார்களே என டென்ஷனாகி, முதலில் அந்தப்படத்தை முடித்துவிட்டு வாருங்கள்.. அப்புறம் இந்தப்படத்தின் படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம் என கூறி படப்பிடிப்பையே தள்ளி வைத்து விட்டாராம்.

Comments are closed.