தாடி வைத்ததால் ‘டார்லிங்’ வாய்ப்பு கிடைத்தது..!

215

 

பொங்கலுக்கு தான் ஹீரோவாக நடித்துள்ள ‘டார்லிங்’ ரிலீஸாவதில் மகிழ்ச்சியும் எதிர்பார்ப்புமாக இருக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்.. அது நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது அவரது பேச்சிலும் நன்றாகவே தெரிந்தது.

ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ‘மேகா’ பட ஹீரோயின் சிருஷ்டி நடிக்க, ஆவியாக நடிக்கிறார் மலையாள நடிகை நிக்கி கல்ராணி.. கருணாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதுசரி.. ஜி.வி.பிரகாஷ் முதலில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியது ‘பென்சில்’ படத்தில் தானே..? அதற்குள் எப்படி டார்லிங்’ முந்திக்கொண்டது என அவரிடம் சந்தேகமும் கேட்கப்பட்டது.

“பென்சில் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது திடீரென ஒரு மூன்று மாதம் இடைவெளி விழுந்த்தது. அந்த நேரத்தில் என்ன செய்வது என தெரியாமல், போகிற போக்கில் தாடி வளர்க்க ஆரம்பித்தேன்.. ஏதேச்சையாக தாடியுடன் என்னை பார்த்த ஞானவேல் ராஜா சார் ‘டார்லிங்’ கதைக்குள் என்னை இழுத்து வந்துவிட்டார்” என ஒரு பென்சில் ‘டார்லிங்’காக மாறிய கதையை கூறினார் ஜி.வி.பிரகாஷ். பொங்கலுக்கு கிட்டத்தட்ட 175 தியேட்டர்களுக்கு குறையாமல் ரிலீசாகிறது இந்த ‘டார்லிங்’.

Comments are closed.