
சினிமா துறையில் இருந்தாலும் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாத பிரபலங்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.. அவர்களில் குட்டிப்புலி, கொம்பன் படங்களை இயக்கிய இயக்குனர் முத்தையாவுக்கும் எந்த ஒரு சோஷியல் மீடியா அக்கவுண்ட்டும் இல்லையாம்..
ஆனால் அவரது பெயரில் டிவிட்டரில் யாரோ சிலர் கணக்கை துவங்கி உண்மைக்கு புறம்பான சில தகவல்களை பரப்பிவரும் விஷயம் முத்தையாவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக இது குறித்து மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதன்படி, சமூக வலைத்தளங்கள் எதையும் தான் பயன்படுத்தவில்லை என்றும், வேண்டுமென்றே சிலர் தன பெயரை தவறாக பயன்படுத்துவதால் அவற்றை நம்பவேண்டாம் என்றும், இன்னும் சிலர் தனது பெயரை சொல்லி நடிக்க வாய்ப்பு தருவதாக கூறுவதை கேட்டு ஏமாறவேண்டாம் என்றும் விளக்கத்துடன் எச்சரிக்கையும் செய்துள்ளார் முத்தையா.
Comments are closed.