‘மஞ்சப்பை’யில் நான் காமெடி பண்ணவில்லை” – ‘காதல்’ சரவணன்

211

காதல் சரவணனை உங்களுக்கு தெரியாமல் இருக்காது.. ‘காதல்’ படத்தில் மேன்ஷனில் தங்கிக்கொண்டு தன்னிடம் வாய்ப்பு கேட்டு வருபவர்களிடம் “உங்களை மைண்ட்ல வச்சுக்கிறேன்” என்று அலம்பல் பண்ணும் அல்டாப் உதவி இயக்குனராக, சிறுத்தையில் கல்யாண வீட்டில் சந்தானம் தனது செல்போனை ஆட்டையை போட்டதுகூட தெரியாமல் அரைமணி நேரம் பேசிக்கொண்டிருப்பவராக இன்று தமிழ் காமெடி சேனல்களில் அதிகம் ஓடிக்கொண்டிருப்பது இவரது காமெடிதான்.

தான் நடிக்கும் படங்களில் சில நிமிடங்கள் மட்டுமே வந்துபோய்க்கொண்டிருந்த காதல் சரவணனுக்கு தற்போது சற்குணத்தின் உதவியாளர் ராகவன் இயக்கியுள்ள ‘மஞ்சப்பை’ படத்தில் படம் முழுவதும் வருகிற மாதிரியான கேரக்டராம். அதிலும் இந்தப்படத்தில் காமெடி பண்ணாமல் குணச்சித்திர கதாபாத்திரமாக நடித்திருக்கிறாராம். ‘மஞ்சப்பை’ தமிழ்சினிமாவில் தன்னை இன்னும் ஒருபடி முன்னோக்கி கொண்டு செல்லும் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் காதல் சரவணன்.

Comments are closed.