அஜித்தை நான் திட்டவில்லை” – கருணாஸ் விளக்கம்..!

185

I Didn't Said Anything About Ajith Told Karunas

சமீபத்தில் நடந்த நடிகர்சங்க தேர்தலில் அஜித் வாக்களிக்க வராதது குறித்து சர்ச்சைகள் எழுந்தன, இந்நிலையில் விஷால் அணியைச் சேர்ந்தவரும், நடிகர் சங்கத்தின் புதிய துணைத் தலைவர்களில் ஒருவருமான கருணாஸின் ட்விட்டர் பக்கத்தில், “நடிகர் அஜித்தின் வீட்டு வாசல்படியை மிதிக்கக் கூடாது” என்றொரு பதிவு பதிவிடப்பட்டது.

இது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது முற்றிலும் தவறான செய்தியாகும். யாரோ விஷமிகள் என்னுடைய ட்விட்டர் கணக்கில் இப்படி ஒரு தவறான முறையற்ற செய்தியை வெளியிட்டுள்ளனர்” என மறுத்துள்ளார் கருணாஸ்.. இதுகுறித்து அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

“ஆரம்ப காலகட்டம் முதல் இன்று வரை நான் அனைத்து நடிகர் நடிகைகளுடன் நட்பாக பழகி வந்துகொண்டிருக்கிறேன். யார் மீதும் எனக்கு தனிப்பட்ட முறையில் விரோதமோ காழ்ப்புணர்ச்சியோ கிடையாது. இந்நிலையில் இப்படி ஒரு செய்தி வந்ததை அறியும் போது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. இதுபற்றி நாளை கமிஷ்னரிடம் முறையாக புகார் அளிக்கவுள்ளேன்” என அதில் கூறியுள்ளார் கருணாஸ்.

Comments are closed.