சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் ‘மீசைய முறுக்கு’ என்ற படத்தின் மூலமாக நடிகராக மட்டுமல்லாமல், இயக்குனராகவும் அறிமுகமாகியிருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி. இந்தப்படத்தில் ஆதியின் தம்பியாக.. அண்ணனுக்கு ஒன்று என்றால் பொங்கி எழும் தம்பியாக நடித்து ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்த இன்னொருவர்தான் நடிகர் ஆனந்த்ராம்.
“இந்தப்படத்திற்காக இயக்குநர் சொன்னதற்காக பாக்ஸிங் கூட கற்றுக்கொண்டேன். இந்த படத்தை தியேட்டரில் ரசிகர்களுடன் பார்த்தேன். ஒரு அறிமுக நடிகர் என்றில்லாமல் ரசிகர்கள் நான் வரும் காட்சிகளில் கைத்தட்டி விசில் அடித்த அனுபவம் எனக்குள் சிலிர்ப்பை தந்தது. அந்த தருணத்தில் ஆனந்தக் கண்ணீருடன் ஆதியைப் பார்த்து நன்றி சொன்னேன். அவரோ இது தொடக்கம் தான். உன்னுடைய வளர்ச்சியை காண ஆசைப்படுகிறேன்” என்றார்.
ஆதியின் வாழ்ழ்த்தோ என்னவோ, தற்போது நடிகர் ஆனந்த்ராம் தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் முன்னணி இயக்குநர் ஒருவரின் பெயரிடப்படாத படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து அறிமுகமாகவிருக்கிறார்

Comments are closed.