ஹேப்பி பர்த்டே யுவன்…!

267

 

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1996ல் ‘அரவிந்தன்’ படம் மூலமாக திரையுலகில் அடியெடுத்து வைத்த யுவன் இந்த 17 வருடங்களில் 100 படங்களை தனது இசையால் தாண்டியிருக்கிறார். இந்த இளம் வயதில் நிச்சயமாக இவர் செய்திருப்பது ஒரு மகத்தான சாதனை தான்.

நடிகர்கள் தங்களது நூறாவது படத்தில் நடிக்கும்போது என்னவிதமான பிரமிப்பு ஏற்படுமோ அதேமாதிரியான உணர்வுதான், யுவன் சங்கர் ராஜா நூறு படங்களுக்கு இசையமைத்துவிட்டார் என்கிறபோதும் ஏற்படுகிறது.இன்றைய தேதியில் யுவனின் இசை இளைஞர்களின் பெஞ்ச் மார்க் ஆகிவிட்டது.

அதிலும் வெங்கட் பிரபு, விஷ்ணுவர்தன், அமீர், சுசீந்திரன், லிங்குசாமி, சீனுராமசாமி என பல இயக்குனர்களின்செல்லப்பிள்ளை யுவன் சங்கர் ராஜாதான். இன்று பிறந்தநாள் கொண்டாடும் யுவன் நலம் பல பெற்று வாழ behind frames பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

Comments are closed.