ஹேப்பி பர்த்டே விஷால்..!

156

விஷால் சொந்தமாக விஷால் ஃப்லிம் ஃபேக்டரி நிறுவனத்தை தொடங்கினாலும் தொடங்கினார், ஒருபக்கம் நடிப்பு, இன்னொரு பக்கம் கம்பெனி வேலைகள் என பிஸியாக இருக்கிறார். ஹரி இயக்கத்தில் ‘பூஜை’ படத்தில் நடித்து வரும் விஷால் படத்தை தீபாவளி ட்ரீட்டாக தர கடுமையாக உழைத்து வருகிறார். மதகஜ ராஜாவை தொடர்ந்து இன்னொரு பக்கம் மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் ‘ஆம்பள’ என்கிற படத்தில் நடிக்கிறார்.

தற்போது லேட்டஸ்டாக வி-மியூசிக்’ என்கிற ஆடியோ நிறுவனத்தையும் ஆரம்பித்துள்ளார். 37வது வயதை தொடும் விஷால் இந்த வருடமாவது தனது திருமண சாப்பாட்டை போடுவார் என உறுதியாக நம்புவோம்.. திரையுலகில் விஷாலின் வெற்றிப்பயணம் தொடர நமது behind frames  தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

Comments are closed.