ஹேப்பி பர்த்டே ட்டு ஹாரிஸ் ஜெயராஜ்..!

209

harris jayaraj
இன்றைய தேதியில் ஏ.ஆர்.ரஹ்மான் உலக அளவிலான சினிமாவுக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார். அவரால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்பி, ரசிகர்களின் நாடித்துடிப்புக்கு ஏற்றபடி இசையமைத்து, அவர்களை உற்சாகத்தில் ஆடவைக்கும் இன்னொரு இசையமைப்பாளர் என்றால் அது நிச்சயமாக ஹாரிஸ் ஜெயராஜ் தான்.

முதல் படத்தின் இசை மூலம் கவனம் ஈர்ப்பவர்கள் திரையுலகில் அசைக்க முடியாத இடத்தை பிடிப்பார்கள் என்பதை இளையராஜா (அன்னக்கிளி), ரஹ்மான்(ரோஜா) ஆகியோருக்கு பிறகு ‘மின்னலே’ படத்தின் மூலம் மீண்டும் நிரூபித்தவர் ஹாரிஸ்தான். வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்கள் மட்டுமே இசையமைத்தாலும் அதில் தன் முத்திரையை ஆழமாக பதித்துவிடுவார் ஹாரிஸ்.

இவரது இசையமைப்பில் இந்த வருடத்திய முதல் வரவாக ஜன-14ல் உதயநிதியின் ‘கெத்து’ ரிலீஸாகிறது. அடுத்து சிங்கம் மூன்றாம் பாகத்திற்கும் இவர்தான் இசையமைக்கிறார். கௌதம் மேனன்-ஜெயம் ரவி புராஜெக்ட்டும் கைவசம் உள்ளது. இன்று பிறந்தநாள் காணும் ஹாரிஸ் ஜெயராஜுக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.

Comments are closed.