ஹேப்பி பர்த்டே சுதீப்..!

217

அது எனவோ தெரியவில்லை, நம் தமிழ் ரசிகர்களுக்கு கன்னடத்தில் இருந்து தமிழுக்கு நடிக்கவரும் நடிகர்களை எளிதாக பிடித்துப்போகிறது. சுதீப்பும் அப்படி வந்த நடிகர் தான்.. ஆனால் இன்று தமிழ்நாட்டில் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய ‘நான் ஈ’ படத்தில் வில்லனாக நடித்த சுதீப்புக்கு கிடைத்த அட்டகாசமான வரவேற்பு தான் இதற்கு காரணம்..

கடந்த நான்கு வருடங்களாக சுதீப் கன்னடத்தில் பிஸியான ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் ஹீரோ என்பதையெல்லாம் மறந்துவிட்டு ராஜமௌலி அழைத்தார் என்பதாலேயே, ‘பாகுபலி’ படத்தில் கொஞ்சநேரமே வந்துபோகும், ஆனால் ஒரு பவர்ஃபுல்லான கேரக்டரில் நடித்துக்கொடுத்து தமிழ் ரசிகர்களை மீண்டும் ஒருமுறை மகிழ்வித்துள்ளார்..

இப்போது விஜய்யுடன் இணைந்து ‘புலி’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அந்த சிம்பிளிசிட்டி தான் சுதீப். இன்னொரு பக்கம் டைரக்ஷன், தயாரிப்பு என தூள்கிளப்பிக்கொண்டு இருக்கிறார்.. இன்று பிறந்தநாள் காணும் சுதீப்பிற்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.

Comments are closed.