ஹேப்பி பர்த்டே ட்டூ சோனியா அகர்வால்..!

113

செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ்சினிமாவுக்கு கிடைத்த அற்புதமான நடிகைதான் சோனியா அகர்வால். தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை என செல்வாவின் ஆஸ்தான ஹீரோயினாக வலம் வந்தார்.

செல்வராகவனுடனான காதல் திருமணமும் அதன்பின் ஏற்பட்ட மணமுறிவும் இன்றும் தமிழ்ரசிகர்களை வருத்தப்படுத்தும் ஒரு சங்கட நிகழ்வுதான். இருந்தாலும் சோகங்களை மனதில் போட்டு புதைத்துக்கொண்டு புன்னகையுடன் மீண்டும் தனது நடிப்பு பயணத்தை தொடர்ந்து வருகிறார் இந்த தெனிந்தியா மோனலிசா. இன்று பிறந்தநாள் காணும் இவருக்கு behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

Comments are closed.