ஹேப்பி பர்த்டே சிபிராஜ்..!

215

sibiraj
சினிமா என்கிற பள்ளியில் எப்படியும் ‘ஸ்டூடன்ட் நம்பர்-1’ ஆகிவிட வேண்டும் என ஆர்வத்தோடு அறிமுகமானவர்தான் சிபிராஜ். ஆரம்பத்தில் சத்யராஜின் மகன் என்கிற அங்கீகாரத்துடன் வலம் வந்தாலும், அடுத்தடுத்து ‘லீ’, ‘நாணயம்’ படங்கள் மூலம் நடிப்பில் தன்னுடைய திறமையையும் வெளிப்படுத்த அவர் தவறவில்லை..

ஆனால் திறமையிருந்தாலும் கூட ,அதிர்ஷ்டமும் நேரமும் கூடிவரவேண்டும் என பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்..? அதை நிரூபிக்கும் விதமாக தனது நாலு வருட காத்திருப்பு வீண்போகாதவாறு ‘நாய்கள் ஜாக்கிரதை’ மூலமாக வெற்றிவாகை சூடினார் சிபிராஜ். குழந்தைகளுக்கு பிடித்த ஒருசில படங்களின் பட்டியலில் அதுவும் இணைந்துவிட்டது.

இன்னும் ஒருபடி மேலாக, அவர் நடித்த ‘ஜாக்சன் துரை’ படம் தயாரிப்பில் இருக்கும்போதே தேனாண்டாள் பிலிம்ஸ் அதன் வெளியீட்டு உரிமையை வாங்கியதும், சன் டிவி அதன் சாட்டிலைட் ரைட்ஸை கைப்பற்றியதும் மிகப்பெரிய ஸ்டார்களின் படங்களுக்கு கூட கிடைக்காத ஒன்று.

ஆக, தனது பாதையில் ஏற்படும் தடைக்கற்களை எப்படி படிக்கற்களாக மாற்றுவது என்கிற வித்தையை சிபிராஜ் கற்றுக்கொண்டுவிட்டார். அதன் காரணமாகவே கதையில் மட்டுமல்ல, படத்தை தயாரிக்கும் நிறுவனங்களை தேர்ந்தெடுப்பதிலும் புதிய முயற்சியை கையாள்கிறார் சிபிராஜ்.. தற்போது மணி செய்யோன் இயக்கத்தில் வாஸ்து மீன் என்கிற புதிய கதைக்களத்தில் உருவாகிவரும் ‘கட்டப்பாவ காணோம்’ என்கிற படத்தில் சிபிராஜ் நடித்து வருகிறார்.

மேலும் இனியும் தானே படங்களை தயாரித்துக்கொண்டு இருக்காமல், நடிப்பில் கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். அதேசமயம் புதிய தயாரிப்பாளர்களை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தும் பணியையும் சத்தமில்லாமல் ஆரம்பித்துவிட்டார்

இனி சிபிராஜின் திரையுலக பயணம் சீரான வேகத்தில் செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை. இன்று பிறந்தநாள் காணும் சிபிராஜுக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

Comments are closed.