சினிமா என்கிற பள்ளியில் எப்படியும் ‘ஸ்டூடன்ட் நம்பர்-1’ ஆகிவிட வேண்டும் என ஆர்வத்தோடு அறிமுகமானவர்தான் சிபிராஜ். ஆரம்பத்தில் சத்யராஜின் மகன் என்கிற அங்கீகாரத்துடன் வலம் வந்தாலும் ‘லீ’, ‘நாணயம்’ படங்கள் மூலம் தன்னுடைய திறமையையும் வெளிப்படுத்தி தனிப்பாதை போட முயற்சித்து வருகிறார் சிபி.
அதன் ஒரு பகுதியாகத்தான் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்ததும் வில்லனாக நடிக்க முன்வந்ததும். தற்போது தன்னுடைய சொந்த நிறுவன தயாரிப்பான ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக வித்தியாசமான வேடத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து இப்போது போஸ்ட் புரொடக்சன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
கடந்த மூன்றாம் தேதி தான் இவரது தந்தை சத்யராஜ் தனது பிறந்தநாளை கொண்டாடினார்.. இதோ இன்று சிபிராஜுக்கு பிறந்தநாள்.. இரண்டு தினங்கள் இடைவெளியில் தந்தை, மகனுக்கு பிறந்த நாட்கள் வருவது உண்மையிலே ஆச்சர்யமான நிகழ்வுதான். இன்று பிறந்தநாள் காணும் சிபிராஜுக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
Comments are closed.