ஹேப்பி பர்த்டே ட்டூ சமுத்திரக்கனி..!

133

தன்னம்பிக்கையின் மறு உருவம் என இயக்குனர் சமுத்திரக்கனியை தாராளமாக சொல்லலாம். அது அவர் இயக்கும் படங்களிலும் எதிரொலிக்கும். மேலும் தனது ஒவ்வொரு படத்திலும் இன்றைய இளைஞர்களுக்கு, சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை சொல்லவும் இவர் தவறுவதே இல்லை.

பொதுவாக மலையாளத்தில் வெளியாகும் ஒரு படம்தான், அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்படுவது வழக்கம். அந்த வழக்கத்தை உடைத்தது சமுத்திரக்கனி இயக்கிய ‘நாடோடிகள்’ படம். மற்ற மூன்று மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட இந்தப்படம் தமிழ்ப்படங்களை ரீமேக் செய்யவிரும்பாத மலையாளத்திரையுலகிலும் நான்காவதாக ரீமேக் செய்யப்பட்டு சாதனை படைத்தது.

இயக்குனராக மட்டுமல்லாமல் மிகச்சிறந்த நடிகராகவும் தன்னை வெளிப்படுத்தியவர் சமுத்திரக்கனி. இவரது படங்களைப்போல இவரது நடிப்புக்கும் மலையாளம் மற்றும் தெலுங்கில் மிகப்பெரிய மரியாதை உண்டு.

இன்று பிறந்தநாள் காணும் இயக்குனர் சமுத்திரக்கனிக்கு behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

Comments are closed.