ஹேப்பி பர்த்டே டூ சமந்தா..!

220

புன்னகை தவழும் குழந்தை முகம்… எப்போதும் ஒவ்வொரு முகங்களிலும்  எதையோ தேடும் கண்கள்.. நொடிக்கு ஒரு முக பாவனை காட்டும் அழகு இதுதான் சமந்தா.. தமிழ் ரசிகர்களின் மனதில் ‘பாணா காத்தாடி’ விட்டு போட்டியின்றி பறந்துகொண்டிருக்கும் இந்த அழகு மயில் கவர்ச்சியை பெரிதாக நம்பாமல் தனது நடிப்பின் மூலம் மட்டுமே முன்னேறி இன்று விஜய், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார்.

தற்போது டபுள் ஜாக்பாட் அடித்த சந்தோஷத்தில் இருக்கிறார் சமந்தா. சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிக்கும் சந்தோஷம் ஒரு பக்கம் என்றால் தெலுங்கில் தான் நடித்த ‘மனம்’ படத்தின் இயக்குனரான விக்ரம் கே.குமார் இயக்கத்திலேயே மீண்டும் சூர்யாவுடன் நடிக்கும் மகிழ்ச்சி இன்னொரு பக்கம்.. தவிர விக்ரம், தனுஷ் படம் என அவரது கேரியர் கிராப் சீராகவே இருக்கிறது.

தெலுங்கில் கடந்த வருடம் சமந்தா நடித்த நான்கு படங்கள் ரிலீஸானது. இந்த வருட கணக்கையும் ‘சன் ஆப் சத்தியமூர்த்தி’ படம் மூலம் ஆரம்பித்துவிட்டார். அதுமட்டுமல்ல தற்போது விக்ரம், சூர்யாவுடன் நடிக்கும் படங்களும் தெலுங்கில் வெளியாகும் வாய்ப்பு இருப்பதால் தெலுங்கில் இடைவெளி ஏற்படுமோ என்கிற பிரச்னையும் சமந்தாவுக்கு இருக்காது என்று தெரிகிறது.

இன்று பிறந்தநாள் காணும் சமந்தாவுக்கு நமது behind frames  தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

Comments are closed.