ஹேப்பி பர்த்டே ட்டு ‘பிரின்ஸ்’..!

261

   

டோலிவுட் இளவரசன் என ஆந்திர ரசிகர்களாலும் திரையுலகத்தினராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் மகேஷ்பாபு. தெலுங்கு சூப்பர்ஸ்டார் கிருஷ்ணாவின் வாரிசு.. இவரை நேர்ல பாக்குறப்ப இந்தப்பூனையும் பால் குடிக்குமாங்கிற மாதிரி சாந்தமான ஆளா இருப்பார். ஆனா சினிமான்னு வந்துட்டா அதுவும் ஆக்‌ஷன் காட்சின்னா ஆள் அப்படியே ருத்ரமூர்த்தியா மாறிடுவார். இதற்கு ‘ஒக்கடு’, ‘போக்கிரி’ என இரண்டு படங்களை சாம்பிள் பார்த்தால் போதும்..

இவர் நடித்த ஒக்கடு, அத்தடு, சைனிக்கூடு, தூக்குடு, சமீபத்தில் வெளியான சீதம்மா வாகிட்லோ சிரிமல்லி செட்டு, இப்போது நடித்துவரும் ‘ஆகடு’ என ‘டுவில் முடியும் படங்கள் எல்லாமே சூப்பர்ஹிட் ஆனவைதான். இதுமகேஷ்பாபுவிற்கு எதேச்சையாக கூட அமைந்திருக்கலாம்.

பெரும்பாலும் தெலுங்கில் மகேஷ்பாபு நடித்து ஹிட்டான படங்களை மட்டுமே தமிழில் ரீமேக் செய்து நடிப்பார்விஜய். அப்படி சூப்பர்ஹிட்டானவைதான்  ‘கில்லி’, ‘போக்கிரி’. இன்று பிறந்தநாள் காணும் தெலுங்குதேச இளவரசனுக்கு நமது behind  frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

 

Comments are closed.