
ரசிகர்களின் நாடித்துடிப்பறிந்து படம் எடுக்கும் வல்லமை எல்லா இயக்குனர்களுக்கும் கைவந்துவிடுவதில்லை. அதிலும் செண்டிமெண்டுடன் ஃபேமிலி ஆடியன்ஸையும் கட்டிப்போடுவதென்றால்.. அதை திரும்ப திரும்ப சாதித்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர் பிரபுசாலமன்.
‘ மைனா’, ‘கும்கி’ என தொடர்ச்சியாக இரண்டு ‘ஹிட்’டுகளை கொடுத்தவருக்கு அடுத்து ‘கயல்’ மூலம் ‘ஹாட்ரிக்’ வெற்றியை சுவைக்க முடியாமல் போனாலும், ஓரளவு கௌரவமான வெற்றியையே பெற்றார். அடுத்ததாக தனுஷை வைத்து படம் இயக்கவிருக்கிறார்.
இவர் இயக்கத்தில் அறிமுகமாகும் ஹீரோக்களும் ஹீரோயின்களும் தமிழ்சினிமாவில் பெரிய அளவில் வலம் வருவார்கள் என்கிற நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளார். இன்று பிறந்தநாள் காணும் பிரபுசாலமனுக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.
Comments are closed.