ஹேப்பி பர்த்டே ஓவியா..!

218

ஓவியா.. ‘களவாணி’ மூலமாக தமிழ் ரசிகர்களின் மனதை களவாடிய கேரளத்து பைங்கிளி.. இயல்பான நடிப்பு.. புன்னகை ததும்பும் முகமாக காட்சியளிக்கும் ஓவியா, பிருத்விராஜின் தங்கையாக மலையாளத்தில் ‘கங்காரு’ படத்தின் மூலம் அறிமுகமானவர்.

ஆனால் தமிழுக்கு வந்தபிறகு மலையாளத்தை விட தமிழில் இவர் நடித்த படங்கள் தான் ஏராளம்.. சில மாதங்களுக்கு முன் வெளியான ‘புலிவால்’ படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்திய ஓவியாவுக்கு இப்போது ‘யாமிருக்க பயமேன்’, ‘அகராதி’ என தமிழில் கைவசம் இரண்டு படங்கள் உள்ளன.

இன்று 23 பிறந்தநாளில் அடியெடுத்துவைக்கும் ஓவியாக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது

Comments are closed.