பொதுவாக தமிழ் சினிமாவில் இயக்குனர்கள்தான் எப்போதும் ட்ரெண்ட் செட்டர்களாக இருப்பார்கள். ஆனால் இப்போது வேகமாக வளர்ந்து வரும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் மூலம் சூப்பர்ஹிட் படங்களை தயாரித்துவரும் சி.வி.குமார், இந்த ட்ரெண்டையே அடியோடு மாற்றியுள்ளார். அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும் என சூப்பர்ஹிட் படங்களாக கொடுத்து கோடம்பாக்கத்தையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்..
தொடர் வெற்றிப்படங்களால் சி.வி.குமாருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது மறுக்கமுடியாத உண்மை. குறிப்பாக, குறும்பட இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதையே தனது லட்சியமாக வைத்துள்ள சி.வி.குமார், முதல் படம் வெளியானபோதே தன்மீது உருவான எதிர்பார்ப்பை மிகச்சரியான முறையில் பூர்த்தி செய்து வருகிறார்.
இதுவரை இவர் தயாரித்த படங்களை மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் நல்ல விலை கொடுத்து வாங்கி வெளியிட்டதுடன் அவற்றின் மூலம் நல்ல லாபமும் சம்பாதித்தன. இன்னும் பல தயாரிப்பு நிறுவனங்கள் இவரது தயாரிப்பில் வெளியாகவிருக்கும் படங்களை வாங்குவதற்காக வரிசைகட்டி நிற்கின்றன.
தமிழ்சினிமாவில் படத்தயாரிப்பின் மூலம் இளைஞர்களுக்கு ஒரு புதிய பாதையை திறந்துவிட்டுள்ள சி.வி.குமாருக்கு இன்று பிறந்தநாள். அவர் தொடர்ந்து வெற்றிகளை குவிக்க வாழ்த்துவதோடு நமது Behind Frames இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
Comments are closed.