ஹேப்பி பர்த்டே பிந்துமாதவி…!

209

பார்ப்பதற்கு சில்க் மாதிரியே இருக்கிறார் என்று திரையுலகினராலும் ரசிகர்களாலும் செல்லமாக அழைக்கப்படும் கண்ணழகி பிந்துமாதவி. இந்தப்பெண்ணிடம் ஏதோ ஒரு ஈர்ப்பு உள்ளது எனும்படியாக பிந்துமாதவியை திரும்பி பார்க்கவைத்தது நிச்சயமாக ‘கழுகு’ திரைப்படம்தான். இந்தப்படத்தில் அவர் நடித்ததைவிட அவரது கண்கள்தான் அதிகம் பேசியது.

தொடர்ந்து வெளியான ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘தேசிங்குராஜா’, ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ என வரிசையாக வந்த படங்கள் பிந்துமாதவியின் நடிப்பை மெருகேற்றி இருப்பதுடன் தமிழ்சினிமாவில் அவருக்கு முக்கியமான இடத்தையும் தந்திருப்பது மறுக்கமுடியாத உண்மை. இதுதவிர சமீபகாலமாக தனது எதார்த்தமான நகைச்சுவையான நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ படத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய பிந்துமாதவி, தற்போது ‘கழுகு’ சத்யசிவா இயக்கும் ‘சவாலே சமாளி’ படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இத்துடன் பாண்டிராஜ் இயக்கத்தில் ‘ஹைக்கூ’ மற்றும் விஷ்ணுவுடன் ‘கலக்குறே மாப்ளே’ மற்றும் சிபிராஜுடன் ஜாக்சன் துரை படத்திலும் நடித்துவருகிறார்.

Comments are closed.