‘ஈட்டி’ படத்தை இயக்கிய ரவி அரசு அடுத்ததாக ஜி.வி.பிரகாஷை வைத்து ‘ஐங்கரன்’ என்கிற படத்தை இயக்குகிறார் என்பதும் அதை காமன்மேன் பிக்சர்ஸ் சார்பாக கணேஷ் தயாரிக்கிறார் என்பதும் நமக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம் தான்.. இந்தப்படத்தின் கதாநாயகியாக மடோனா செபாஸ்டியன் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக மஹிமா நம்பியார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது..
தமிழ் சினிமாவில் அழகும் திறமையும் வாய்ந்த, ஆனால் சரியான வாய்பு அமையாமல் இருக்கின்ற நடிகைகளில் மஹிமாவும் ஒருவர்.. என்னமோ நடக்குது, சாட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள மஹிமாவுக்கு, அருண்விஜய் ஜோடியாக நடித்துள்ள, விரைவில் வெளியாக இருக்கும் ‘குற்றம்-23’ படம் ஒரு மிகப்பெரிய பிரேக் கொடுக்கும் என அந்தப்படத்தின் படக்குழுவினர் உறுதியாக சொல்கிறார்கள்.. இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷின் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருப்பது மஹிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் என்பது உறுதி.

Comments are closed.