சிம்பொனி இசைக்காக ஜெர்மனி செல்கிறார் ஜி.வி.பிரகாஷ்..!

186

‘வெயில்’ படத்தில் தொடங்கி வெற்றிகரமாக தனது இசைப்பயணத்தில் கால் சதத்தை தாண்டிவிட்டார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியின் மகன் என்கிற அடையாளத்தை தனது அறிமுகத்திற்கு மட்டுமே பயன்படுத்திக்கொண்ட ஜி.வி.பிரகாஷ் இந்த அளவுக்கு வளர்ந்தது எல்லாம் தன் திறமையினால மட்டுமே.

கமல் தவிர, சூப்பர்ஸ்டார் படம் முதற்கொண்டு கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்துவிட்டார் ஜி.வி.பிரகாஷ். தற்போது ஹீரோவாகவும் களம் இறங்கி மூன்று படங்களில் நடித்துவருகிறார்.

அதனால் நடிகராக மட்டுமே அவர் பயணம் மேற்கொள்வார், இசை துறையில் கவனம் செலுத்த மாட்டார் என போலி ஆருடங்களும் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் ஜி.வி பிரகாஷ் சிம்பொனி இசைக்காக ஜெர்மனி செல்ல இருப்பது அவர் இசை அமைப்பாளராக மென்மேலும் உயர இருப்பதை மெய்ப்பிக்கிறது.

சர்வதேச சந்தையில் மிக முக்கியமான ஒரு நுகர் பொருளின் விளம்பரத்துக்காக நான் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார் ஜி.வி. ஜெர்மனியில் உள்ள Stuttgart என்னும் நகரத்தில் மேற்கொள்ள இருக்கும் இசைப்பதிவுக்காக விரைவில் ஜெர்மனி செல்ல இருக்கிறார்..

இந்த வாய்ப்பு பற்றி அவர் குறிப்பிடும்போது, “இசை உலகில் மிக முதன்மையானவர் எனக் கருதப்படும் கோன்ராத் பௌமன் அவர்களின் இசை காற்றில் மிதக்கும் ஜெர்மனி நாட்டில் என்னுடைய இசையும் கலக்கும் என்பதே எனக்கு பெருமை ‘ என்கிறார் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் ஜி வி பிரகாஷ்.

Comments are closed.