சினேகன் பாடல் எழுதிய ‘குரு உச்சத்துல இருக்காரு’..!

137

Guru uchaththula irukkaru audio

அறிமுக இயக்குநர் தண்டபாணியின் இயக்கத்தில், தயாரிப்பாளர் தன சண்முகமணி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குரு உச்சத்துல இருக்காரு’. இந்தப் படத்தில் குரு ஜீவா கதாநாயகனாகவும், ‘பைசா’ திரைப்படத்தில் நடித்த ஆரா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் பாண்டியராஜன், M.S.பாஸ்கர், நமோ நாராயணன், இமான் அண்ணாச்சி, மனோ மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

‘குரு உச்சத்துல இருக்காரு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஜய் வசந்த், திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், நடிகர் ஆரி, பின்னணி பாடகர் வேல்முருகன் மற்றும் பிக்பாஸ் புகழ் சினேகன் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

இவர்கள் முன்னிலையில் இத்திரைப்படத்தின் டிரைலர் மற்றும் படத்தின் இரண்டு பாடல் காட்சிகள் திரையிடப்பட்டது. வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் இயக்குநரையும், தயாரிப்பாளரையும் மற்றும் படத்தில் பணிபுரிந்த கலைஞர்கள் அனைவரையும் பாராட்டி படம் வெற்றி பெற வாழ்த்தினார்கள்.

‘குரு உச்சத்தில இருக்காரு’ திரைப்படத்திற்கு இசையமைத்த தாஜ் நூர், இந்தப் படத்தில் வேலை பார்த்தது தனக்கு ஒரு புது அனுபவத்தை தந்ததாகவும், பாடல் காட்சிகளுக்கான படப்பிடிப்புகளை முடிந்த பின்பு, அந்தக் காட்சிகளுக்கேற்றவாறு தான் இசையமைத்தது தனக்கொரு சவாலாக இருந்ததாகவும் தெரிவித்தார். படத்தின் பாடல்களை சினேகன், பா.விஜய் மற்றும் மீனாட்சிசுந்தரம் ஆகியோர் எழுதி இருக்கிறார்கள்

Comments are closed.