
கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி செந்திலிடம், “அந்த சினிமாக்காரங்க தான் பொறந்தநாள் கொண்டாடுறாங்கன்னா நீயுமாடா..? என காமெடியாக சொல்வார்.. ஆனால் நிஜத்தில் சினிமாக்காரராகிய கவுண்டமணி தனது பிறந்தநாளை கொண்டாடுவதில்லை என்பதை எழுதப்படாத விதியாக கடைபிடித்து வருகிறார்.
தற்போது சுசீந்திரன் உதவியாளர் கணபதி பாலா இயக்கத்தில் கவுண்டமணி நடித்துவரும் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை’ படக்குழுவினர் நேற்று முன் தினம் கவுண்டமணியின் 76வது பிறந்தநாளை தடபுடலாக கொண்டாட முடிவுசெய்து படப்பிடிப்பு தளத்தில் அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தனராம்.
ஆனால் இதையறிந்த கவுண்டமணி பிறந்தநாள் கொண்ட்டாட்டம் எல்லாம் வேண்டாம்.. படப்பிடிப்பை கவனியுங்கள் என சொல்லிவிட்டார். படப்பிடிப்புக்குழுவினருக்கு இதில் வருத்தம் இருந்தாலும், மாலை படப்பிடிப்பு முடிவடைந்ததும் அனைவருடனும் நின்று போட்டோ எடுத்துக்கொள்ள சம்மதித்தாராம் கவுண்டமணி.
ஆனால் அப்போதும் கூட “கேக் வெட்ட வேண்டாம்.. எனக்கு பொக்கே எதுவும் கொடுக்க வேண்டாம்” என்ற நிபந்தனையும் விதித்துவிட்டாராம். எப்படியோ தங்களுடன் நின்று க்ரூப் போட்டோ எடுத்துக்கொள்ளவாவது சம்மதித்தாரே என சந்தோஷப்பட்டுக்கொண்டார்கள் படக்குழுவினர்.
Comments are closed.