நடிப்பால் அசத்திய வரலட்சுமி ; தங்கச்செயின் பரிசளித்த பாலா..!

214

டைரக்டர் பாலா அவ்வளவு எளிதில் உணர்ச்சிவசப்பட்டு விடுபவர் அல்ல.. ஆனால் அவரையே தனது நடிப்பால் கண்ணீர்விட வைத்துவிட்டார் வரலட்சுமி.. பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலட்சுமி நடிக்கும் ‘தாரை தப்பட்டை’ படம் தஞ்சாவூர் அருகில் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது..

இதற்காக மிகப்பெரிய காலனி செட் ஒன்று போடப்பட்டுள்ளது. சமீபத்தில் படத்தின் மிக முக்கியமான காட்சி ஒன்றை படமாக்கினார் பாலா. அதாவது வரலட்சுமி மீது ஒரு கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்துவது போன்ற காட்சி.. இந்தக்காட்சி படம் பார்க்கும் ஆடியன்ஸுக்கு வரலட்சுமியின் கேரக்டர் மீது இரக்கத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கவேண்டும்..

இயக்குனர் எதிர்பார்த்ததை விட மேலாகவே இந்த காட்சியில் நடித்து அசத்தினார் வரலட்சுமி.. ஆனால் அசந்தர்ப்பவசமாக அந்த காட்சியில் நடித்தபோது அவரது அவரது கழுத்து எழும்பை உடைத்துக்கொண்டார். ஆனால் அதை வெளியே யாரிடமும் சொல்லாத வரலட்சுமி, அதேசமயம் யாருக்கு தெரியாமல் சிகிச்சையும் எடுத்துக்கொண்டார்

மறுநாள் அதே காட்சி மீண்டும் எடுக்கப்பட்டபோது வலியை துளியும் வெளிக்காட்டாமல் சிறப்பாக நடித்தார் வரலட்சுமி.. அதிகம் உணர்ச்சிகளை எப்போதும் வெளிப்படுத்தாத பாலாவுக்கே வரலட்சுமியின் நடிப்பையும் அர்ப்பணிப்பு உணர்வையும் பார்த்து கண்களில் கண்ணீர் வந்துவிட்டதாம். உடனே வரலட்சுமியை பாராட்டிய பாலா, தான் அணிந்திருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க ஸ்படிக மாலையை கழட்டி பரிசாக அளித்துள்ளார்..

அதுமட்டுமல்ல, நிச்சயம் வரலட்சுமியின் நடிப்பிற்காக அவருக்கு இந்தப்படத்தின் மூலம் தேசியவிருதும் கிடைக்கும் என தனது குழுவினரிடமும் கூறியுள்ளார்.. நடிப்பதோடு மட்டுமல்லாமல் மீதி நேரங்களில் பாலாவிடம் உதவி இயக்குனர் போல மற்ற வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்கிறாராம் வரலட்சுமி.

Comments are closed.