தமிழ்சினிமாவின் முக்கியமான, முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் தான் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா… இந்த நிறுவனத்தின் வெள்ளி விழா வருட திரைப்படமாக ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ படம் உருவாகியுள்ளது. இதில் அதர்வா, சூரி, ரெஜினா, அதீதி போஹன்கர் ஆகியோர் நடிக்க இசையமைப்பாளர் டி.இமான் இசையில், இயக்குநர் ஓடம் இளவரசு இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேரு மாலை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினருடன் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். விழாவில் பெப்ஸி தலைவரும் இயக்குநருமான ஆர்.கே.செல்வமணி கலந்துகொண்டு பேசியபொது தனக்கும் ட்.சிவாவுக்குமான ஆழமான நட்பை குறிப்பிட்டார்.
“இந்தப்படத்துக்கு ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் என்ற மிகச்சிறப்பான தலைப்பு தமிழில் உள்ளது அதை GGSR என்று ஆங்கிலத்தில் அழைப்பது தவறாகும். வரிவிதிப்புக்காக தமிழில் பெயர் வைக்கக்கூடாது. தமிழ் மேல் பற்றோடு நாம் தமிழில் தலைப்பு வைக்க வேண்டும். தமிழ் நிலைத்து இருக்கவேண்டும் என்றால் எல்லோரும் தமிழில் பெயர் வைக்க வேண்டும்.
தயாரிப்பாளர் சிவா இசையமைப்பாளர் இமானுக்கு சம்பளமே கொடுக்க வேண்டாம். அப்படி கொடுத்திருந்தால் திருப்பி வாங்கி விடுங்கள். இப்படி நான்கு கதாநாயகிகளோடு சேர்ந்து அவர் இருக்கும் புகைப்படத்தை பார்க்கும் போது எனக்கு பொறாமையாக உள்ளது.
எனக்கு முதல் படம் கிடைக்க காரணமாக இருந்தவர் அம்மா க்ரியேஷன் சிவா தான். அவர் தான் தயாரிப்பாளர் இம்ப்ராஹீம் ராவுத்தரிடம் பேசி எனக்கு முதல் பட வாய்ப்பை வாங்கி தந்தார். அந்த படம் இடையில் வேறொரு இயக்குநரிடம் போனது. அந்த சமயத்திலும் தயாரிப்பாளர் ராவுத்தரிடம் பேசி மீண்டும் எனக்கு முதல் பட வாய்ப்பை வாங்கி தந்தவர் சிவா அவருக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்” என்றார் ஆர்.கே.செல்வமணி.
ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் இசை வெளியீட்டு விழாவுக்கு இடையே இயக்குநர் வெங்கட்பிரபுவின் பார்ட்டி திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிட்டு விழா நடந்தது இதில் இயக்குநர் வெங்கட்பிரபு, அந்தப்படத்துக்கு இசையமைக்கும் சத்யா ராஜ், ரம்யா கிருஷ்ணன், சிவா, கயல் சந்திரன், ரெஜினா, நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments are closed.