
பிரபல தயாரிப்பு நிறுவனமான பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இங்கே தமிழில் உள்ள முன்னணி இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுடன் கைகோர்த்து பிரமாண்டமான படங்களை தயாரித்தும் வெளியிட்டும் வருகிறது.. அந்தவகையில் மே-19ஆம் தேதி ஆரம்பித்து அடுத்த 50 நாட்களுக்குள்ளாக 4 படங்களை ரிலீஸ் செய்யும் அதிரடி முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்த நான்கு படங்களில் பாக்ஸ் ஸ்டார் நிருவனத்துடன் இயக்குனர் அட்லீ இணை தயாரிப்பில் உருவாகியுள்ள திகில் கலந்த நகைச்சுவை படமான ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தை மே 19-ஆம் தேதி அன்று வெளியிடுகிறார்கள். இதனை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ரங்கூன் படத்தை ஜூன் 9-ஆம் தேதி வெளியிடுகிறார்கள்.
தொடர்ந்து வெற்றிமாறன் தயாரிப்பில், அரசியல் நையாண்டியுடன் தயாராகியுள்ள ‘அண்ணனுக்கு ஜெய்’ படத்தை ஜூலை 7 ஆம் தேதி அன்றும் இந்த படங்கள் தவிர விஷ்ணு விஷால் நடிப்பில் தயாராகியுள்ள நகைச்சுவை படமான ‘கதாநாயகன்’ படத்தையும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகின்றது.
Comments are closed.