
அதிரடி படமாக உருவாகி இருக்கும் ‘எங்கிட்ட மோதாதே’ படத்தில் சதுரங்க வேட்டை’ நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.. பாண்டிராஜ், செல்வராகவன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்த ராமு செல்லப்பா என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். ஈராஸ் நிறுவனம் வெளியிடும் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இந்தவிழாவில் கலந்துகொண்ட இயக்குனர் பாண்டிராஜ், தனது சிஷ்யன் தன்னிடம் வேளைக்கு செர்ந்தவிதம் பற்றி கூறி சுவாரஸ்யம் ஏற்படுத்தினார். “ராமு செல்லப்பா என்னிடம் உதவி இயக்குநராக சேரும்போது நான் அவரிடம் கேட்ட முதல் விஷயம் உனக்கு சமைக்க தெரியுமா என்று தான். அப்போது என்னிடம் தெரியும் என்றார் அதன் பிறகு நான் அவரை சமைக்க சொன்னேன், அவர் சமைத்த உணவு மிகவும் மோசமாக இருந்தது அதன் பிறகு நான் அவருக்கு முதலில்சமைக்கத் தான் கற்று கொடுத்தேன். அதன் பிறகு தான் என்னிடமிருந்து அவர் சினிமாவை கற்று கொண்டார்” என்றார் பாண்டிராஜ்.
Comments are closed.