‘எங்கிட்ட மோதாதே’ – கேப்டன் டைட்டிலுடன் ஈராஸின் புது பிளான்..!

226

 

இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் இன்டர்நேஷனல் இந்தியில் பிரமாண்டமான படங்களை தயாரித்து வருகிறது.. ஆனாலும், தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தற்போது பெரிய படங்களை வாங்கி வெளியிடும் ஈராஸுக்கு, இன்னும் தனது எல்லையை தமிழில் விரிவுபடுத்தவேண்டும் என்பது தான் விருப்பம்.

அதன் ஒரு பகுதியாகத்தான் ஆர்.வி.பிலிம்ஸுடன் இணைந்து ‘எங்கிட்ட மோதாதே’ மற்றும் ‘பிறை தேடிய நாட்கள்’ என இரண்டு படங்களை தயாரித்து வருகிறது. இதில் ‘எங்கிட்ட மோதாதே’ படம் ஏற்கனவே 25 வருடத்திற்கு முன் விஜயகாந்த் நடித்த படத்தின் டைட்டில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

விடியும் முன் படத்தில் பணியாற்றிய துணை இயக்குனர் ஆபிரகாம் பிரபு என்பவர் ‘பிறைதேடிய நாட்கள்’ மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்தப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார். அதிரடி படமாக உருவாகும் ‘எங்கிட்ட மோதாதே’ படத்தில் ‘சதுரங்க வேட்டை’ நட்ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார். பாண்டிராஜ், செல்வராகவன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக இருந்த ராமு செல்லப்பா என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்.

Comments are closed.