“எடிசன் சினிமாவை கண்டுபிடிச்சார்னு யார் கண்டுபிடிச்சா?” – பார்த்திபன் குறும்பு..!

237

 

மை தமிழ் மூவி டாட் காம் நிறுவனம் கடந்த 7 ஆண்டுகளாக “எடிசன் பிலிம் அவார்ட்ஸ்” என்ற பெயரில் தமிழ்த் திரைப்படங்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கி வருகிறது. அந்தவகையில் இந்த வருடம் எட்டாம் ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது. இதற்கான தொடக்கவிழா நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பார்த்திபன், ரமேஷ்கண்ணா,  சேது, நடன இயக்குனர் பாபி உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய பார்த்திபன், “சினிமாவை எடிசன் கண்டுபிடிச்சார்னு தெரியும்.. அதை எடிசன் தான் கண்டுபிடிச்சார்னு யார் கண்டுபிடிச்சாங்கன்னு தான் தெரியலை.. எடிசனுக்கு என் முதல் படத்திலேயே நான் டைட்டில் கார்டில் நன்றி சொல்லியிருந்தேன்” என கூறி பெருமிதப்பட்டார்.

Comments are closed.