‘மனம்’ பண்ண மனம் இல்லாத விக்ரம் கே.குமார்..!

202

vikram k kumar 1
கடந்த வருடம் தெலுங்கில் வெளியான சூப்பர்ஹிட் படம் ‘மனம்’. மறைந்த மூத்த நடிகர் நாகேஸ்வரராவ் நடித்த கடைசிப்படம்.. இவருடன் அவரது மகன் நாகார்ஜூனா, பேரன் நாகசைதன்யா இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். விக்ரம் கே.குமார் இயக்கிய இந்தப்படம் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட என்கிற பெருமையையும் பெற்றது.

ஆந்திரா மக்களால் கொண்டாடப்பட்ட இந்தப்படத்தை விக்ரம் கே.குமார் தமிழிலும் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டக்கென சூர்யாவை வைத்து ‘24’ படத்தை இயக்க ஆரம்பித்துவிட்டார்.. அப்படியானால் சூர்யா படத்தை முடித்துவிட்டு ‘மனம்’ படத்தை தமிழில் ரீமேக் செய்வாரா என்கிற கேள்விக்கு சமீபத்தில் பதில் அளித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விக்ரம் கே.குமார்.

“மனம் படத்தை யாருக்காக எடுத்தேனோ, யாருக்கு போய் சேரவேண்டும் என நினைத்தேனோ அவர்களிடம் அது சென்று சேர்ந்துவிட்டது. அதே கதையை பண்ணினால் பணம் கிடைக்கலாம்.. ஆனால் எனக்கு எந்த முன்னேறமும் இருக்காது.. ஒரு வருஷம் வேஸ்ட் ஆவது தான் மிச்சம்” என ஓப்பனாக கூறியுள்ளார்.

Comments are closed.