படக்குழுவினர் தப்பி ஓடாமல் இருக்க இயக்குனரின் ‘திகில்’ திட்டம்..!

202

கண்ணழகி ஷெரினை மறந்திருக்க மாட்டீர்கள் தானே.. மீண்டும் ‘திகில்’ என்கிற படத்தின் மூலம் உங்களை மிரட்ட வருகிறார்.. கூடவே கதாநாயகனாக ‘முருகா’ அசோக்கும்.. சந்தோஷ் கொண்டேன்கேறி என்கிற கன்னட இயக்குனர் இயக்கியுள்ள இந்த திகில்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை மிகவும் எளிமையாக நடைபெற்றது. ஆனால் ஷெரின் தான் வரவில்லை.

இந்தப்படத்தின் பாடல்களை அண்ணாமலை எழுத கன்னட இசையமைப்பாளர் ஆஸ்லே படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த விழாவில் பேசியவர்கள் இந்தப்படத்திற்காக இயக்குனர் சந்தோஷ் காட்டிற்குள்ளேயே கிட்டத்தட்ட பல மைல்கள் கூட்டிச்சென்று அங்குள்ள பங்களா ஒன்றில் படமாக்கியதாக கூறினார்கள்..

அதிலும் பாதை ஒவ்வொன்றிலும் பல பிரிவுகளாக பிரிந்து சென்றதால் படக்குழுவினர் மீண்டும் மெயின் ரோட்டிற்கு திரும்பவேண்டுமேன்றால் அது இயக்குனர் உதவியில்லாமல் முடியாது என்பது போல ஆகிவிட்டதாம். ஒருவேளை இது. படக்குழுவினர் தப்பி ஓடாமல் இருக்க இயக்குனரின் ‘திகில்’ திட்டமாக இருந்தாலும் இருக்கமோ என வேடிக்கையாகவும் சொன்னார்கள்….!

Comments are closed.