இயக்குனர் சிகரம் காலமானார் ; தமிழ் திரையுலகமே ஸ்தம்பித்தது

219

 

தமிழ் திரையுலகை தாங்கிப்பிடித்துக்கொண்டிருந்த தூண் ஒன்று சரிந்து விட்டது. நேற்று மாலை இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் நம்மை விட்டு மறைந்தார். அவரது மறைவால் ஒட்டுமொத்த திரையுலகமும் கண்ணீரில் தத்தளிக்கிறது. தமிழ்சினிமாவில் இன்று பல விழுதுகளை பரப்பிச்சென்றிருக்கும் மிகப்பெரிய ஆலமரம் தான் கே.பாலசந்தர்.

சமூகத்தில் பலர் பேச தயங்கிய விஷயங்களை துணிச்சலாக சினிமாவாக்கியவர் பாலசந்தர். மற்றவர்களிடம் இருந்து எப்போதுமே தனது படைப்புகளால் தனித்து தெரிபவர்.. அதனாலேயே இயக்குனர்களின் பிதாமகன், நாயகர்களின் பிரம்மா என திரையுலகில் கடவுள் ஸ்தானத்தில் வைத்து பார்க்கப்படுபவர்..

ரஜினி, கமல், விவேக், பிரகாஷ்ராஜ் என பலர் இவர் இவர் கையால் செதுக்கப்பட்ட சிற்பங்கள் தான். அவரது இழப்பு தமிழ்சினிமாவுக்கு ஈடுசெய்ய முடியாத ஒன்று.  தமிழ் திரையுலகம் இதிலிருந்து மீண்டுவர நீண்ட நாட்களாகும் என்பது மட்டும் உண்மை. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

Comments are closed.