பில்லாவையும் ரங்காவையும் ஒன்றாக்கிய பாண்டிராஜ்..!

207

pandiraj

தமிழ்சினிமாவில் தான் அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன், விமல் இருவரையும் ஒன்றாக இணைத்து பாண்டிராஜ் இயக்கிய படம் தான் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’.. இந்த இரண்டு நடிகர்களுக்கும் இந்தப்படம் ஏணிப்படியாக இருந்து அவர்கள் அடுத்த கட்டத்துக்கு மேலேற உதவியது.. தற்போது இந்த வெற்றிப்படத்துக்கான இரண்டாம் பாகத்தை உருவாக்கும் வேலைகளில் இயக்குனர் பாண்டிராஜ் மும்முரமாக இருக்கிறாராம்.

ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் இரண்டு ஹீரோக்கள் கிடையாது.. பில்லாவையும் ரங்காவையும் ஒரே ஆளாக மாற்றி விட்ட பாண்டிராஜ் கதாநாயகனாக இந்தமுறை ஜி.வி.பிரகாஷை அழைத்துக்கொண்டுள்ளார். முதலில் சிவகார்த்திகேயன் தான் இந்தப்படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவரது கால்ஷீட் பிஸியாக இருப்பதால் அவரால் நடிக்க முடியவில்லை என்றாலும் கூட இந்த கதையை கேட்ட அவர், ரொம்பவே புதுவிதமாக இருப்பதாக பாராட்டினாராம்.

Comments are closed.