துல்கர் சல்மானுக்கு பெயர் வைக்க விரும்பாத கமல் வாரிசு..!

230

கதாநாயகனுக்கு பெயர் வைக்காமலேயே ஒரு முழு நீள நாவல் வெளிவந்திருக்கிறது. அதேமாதிரி ஒரு படம் முழுவதும் பெயரில்லாமலேயே கதாநாயகன் நடித்திருக்கிறாரா என்றால் அது அபூர்வம் தான்.. தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த ‘அர்ஜூன்’ என்கிற படத்தில் அவர் பெயரை கடைசிவரை யாரும் அழைக்கமாட்டார்கள்.. அவரும் சொல்லமாட்டார். என்ட் கார்டு போடும்போதுதான் தன் பெயர் ‘அர்ஜூன்’ என்று சொல்வார்.

இப்போது அடிக்கடி பரிசோதனை முயற்சிகளில் இறங்கும் மலையாள சினிமாவும் ‘100 டேய்ஸ் ஆப் லவ்’ எகிற படத்தில் அப்படி ஒரு முயற்சியை செய்யவிருக்கிறது. இந்தப்படத்தில் நாயகனாக நடிக்கும் துல்கர் சல்மானுக்கு படத்தில் பெயரே கிடையாதாம்.

இந்தப்படத்தை இயக்குபவர் அறிமுக இயக்குனராக களம் இறங்கியுள்ள ஜென்யூஸ் முகம்மது. இவர் வேறுயாருமல்ல பிரபல மலையாள இயக்குனர் கமலின் மகன் தான். தமிழ்ல் பிரசாந்த், ஷாலினி நடித்த ‘பிரியாத வரம் வேண்டும்’ படத்தை இயக்கினாரே அவர் தான் இயக்குனர் கமல்.

Comments are closed.