கன்னட சினிமாவுக்கு தாவிய இயக்குனர் கதிர்..!

236

 

தமிழில் ‘இதயம்’ படம் மூல அறிமுகமாகி, அந்த அழகான காதல் காவியத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் இயக்குனர் கதிர். தொடர்ந்து காதல் படங்களாகவே எடுத்து தள்ளிய கதிர், அப்பாஸ், குணால் போன்ற ஹேண்ட்சம், சாக்லேட் ஹீரோக்களையும் அறிமுகப்படுத்தினார்.

தமிழில் நீண்ட இடைவெளி விட்டிருந்த கதிரை கன்னட சினிமா இரு கை நீட்டி வரவேற்கவே, அங்கே சென்று, தற்போது ‘நேன் லவ் ட்ராக்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். கன்னட டிவி நடிகர் ஒருவரை கதானாயாகனாக்கி இருக்கும் கதிர், கதாநாயகியையும் அறிமுகமாகவே தேர்ந்தேடுத்தெடுத்திருக்கிறார்.

ஏன் பெங்களூரு பக்கம் போய்விட்டீர்கள் என்று கேட்டால், “பெங்களூரு எனக்கு ஒன்றும் புதிது அல்லவே.. இங்கே ரோட்டில் நடந்து போய்க்கொண்டு இருக்கும்போதுதான் அப்பாஸை பார்த்து ஹீரோவாக நடிக்கிறாயா என கேட்டேன்… அதேபோல இங்கே உள்ள பார்க்கில் அமர்ந்திருக்கும்போது இங்கே உடற்பயிற்சி செய்ய வருவதாக சொல்லிக்கொண்டு டைம்பாஸ் பண்ணும் இரண்டு இளைஞர்களை பார்த்தேன்.. அவர்களை வைத்தே கதையையும் உருவாக்கி விட்டேன்” என்கிறார்.

 

Comments are closed.