தன் பெயரில் ஃபேஸ்புக் மோசடி – காவல்துறை ஆணையரிடம் இயக்குனர் ஹரி புகார்

203

பிரபலங்களின் பெயரை பயன்படுத்தி ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் சிலர் போலியான தகவல்களை பரப்புவது தொடந்துகொண்டுதான் இருக்கிறது. பெரும்பாலும் நடிகர், நடிகைகளின் பெயரை பயன்படுத்தி தவறான தகவல்களை வெளியிட்டு சங்கடத்தில் ஆழ்த்துவதுதான் வழக்கமாக இருந்தது.

ஆனால் தற்போது இயக்குனர் ஹரியின் பெயரை பயன்படுத்தி யாரோ ஒரு சில விஷமிகள் அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்கும்படி அவர் பெயரில் போலியான ஃபேஸ்புக் கணக்கை தொடங்கி அவரைப்பற்றி தவறான செய்திகளை பரப்பிவருகின்றனர். இதனை அறிந்த ஹரி அதிர்ச்சி அடைந்ததுடன் கோவை காவல்துறை ஆணையாளரிடம் இதுகுறித்து புகாரும் அளித்துள்ளார்.

அந்தப்புகாரில், “நான் இதுவரையில் எனது பெயரில் ஃபேஸ்புக் கணக்கு எதுவும் ஏற்படுத்தவில்லை. நான் திரைப்பட துறையில் பிரபலமாக உள்ள காரணத்தினால், இயக்குனர் ஹரி என்ற எனது பெயரில், என்னுடய அனுமதியின்றி, எனக்கு தெரியாமல் ஃபேஸ்புக் கணக்கை ஏற்படுத்தி, எனது பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் அதில் என்னுடய விவரங்களை தவறாக சித்தரித்துள்ளனர். அந்த போலி ஃபேஸ்புக் கணக்கை தடை செய்தும், இந்த மோசடியை செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என இயக்குனர் ஹரி குறிப்பிட்டுள்ளார்..

Comments are closed.