மனக்கசப்பு எதுவுமின்றி விக்ரம் படத்தை விட்டு வெளியேறிய ஒளிப்பதிவாளர்..!

227

jomon t john

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் இருந்து சில நாட்களுக்கு முன் அதன் ஒளிப்பதிவாளர் ஜோமோன் டி ஜான் வெளியேறிவிட்டார் என்றும் அவருக்கு பதிலாக ஒளிப்பதிவாளர் ரவி.கே. சந்திரனின் மகன் சந்தான கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்கிற செய்தி வெளியானது..

இத்தனைக்கும் கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் தான் இந்த மலையாள ஒளிப்பதிவாளர் ஜோமோன் டி ஜான்.. அவரது ஒர்க்கிங் ஸ்டைல் பிடித்துப்போகவே விக்ரமை வைத்து தான் இயக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்திற்கும் அவரையே ஒளிப்பதிவாளராக பணியாற்ற வைத்தார் கௌதம் மேனன்.

அதுமட்டுமல்ல ஆரம்பத்திலேயே ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ஐந்து நிமிட டீசரை அழகான ஒளிப்பதிவில் மிரட்டலாக படமாக்கியும் இருந்தார் ஜோமோன்.. பின் எதனால் அந்தப்படத்திலிருந்து ஜோமோன் வெளியேறினார் என்கிற வினாவும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.. ஆனால் அதற்கான விடையும் இப்பொது தெரியவந்துள்ளது.

ஆம்.. பாலிவுட்டில் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அக்சய் குமார் நடிக்கும் ‘கோல்மால் அகெய்ன்’ படத்தில் பணியாற்ற முடியுமா என ஏற்கனவே இவரை கேட்டிருந்தார்கள். ஆனால் அதில் கொஞ்சம் முன்னே பின்னே கால தாமதம் ஆகவே அதற்குள் ‘துருவ நட்சத்திரம்’ வேலையை ஆரம்பித்து விட்டார் கௌதம் மேனன்.. இந்தநிலையில் இப்போது அங்கே ‘கோல்மால்’ பட வேலைகள் ஆரம்பிக்கவே கௌதமிடம் நிலைமையை விலக்கிவிட்டு பாலிவுட்டுக்கு பறந்துவிட்டார் ஜோமோன்… கூடவே, “நல்ல விஷயங்கள் தேடி வரும்போது அதற்கு கொஞ்சம் விலைகொடுத்துதான் ஆகவேண்டும்.. அதனால் பாலிவுட்டுக்கு போகிறேன்.. தொடர்ந்து கௌதமுடன் பணியாற்ற முடியாதது வருத்தம் தான்” என சால்ஜாப்பும் சொல்லியிருக்கிறார் ஜோமோன்.

Comments are closed.