கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் ; தனுஷின் வீறுநடை..!

145

dhanush in hollywood
தனுஷின் தடதடக்கும் வேகம் அவரது ரசிகர்களையே மிரள வைத்திருக்கிறது.. காரணம் பாலிவுட் என்கிற லெவலை எல்லாம் தாண்டி ஹாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளார் தனுஷ். The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard’ – எப்பா.. படிக்கவே மூச்சு வாங்குகிறதா..?. இதுதான் தனுஷ் நடிக்கவுள்ள ஹாலிவுட் படத்தின் பெயர்.

ஹாலிவுட்டில் தனது முதல் படத்திலே சான் ஆண்டிரியாஸ் படத்தில் நடித்து புகழ் பெற்ற உமா தர்மன் மற்றும் அலெக்ஸாண்டிரா டட்டரியோவுடன் நடிக்கிறார் தனுஷ். ஒரு ரகசிய மிஷன் ஒன்றுக்காக தனது தாயாரால் இந்தியாவில் இருந்து பாரீஸ் நகரத்துக்கு அனுப்பப்படும் மேஜிசியனாக நடிக்கிறாராம் தனுஷ்.

“இந்தியப் படங்கள் நிறைய பார்ப்பேன். அதில் தனுஷ் தான் இந்த வேடத்துக்குப் பொருத்தமானவராக இருப்பார் என்று தோன்றியது” என்கிறார் இந்தப்படத்தின் இயக்குநர் மர்ஜேன் சட்ரபி. இந்த ஆண்டு ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்தியா, ஃப்ரான்ஸ் மற்றும் மொரோக்கோவில் இந்தப்படம் எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளனர் இயக்குநர் மர்ஜேன் சட்ரபி.

Comments are closed.