தனுஷ் நடிப்பில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கும் படம் தொடங்கியது!

64

’ராயன்’ படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தனுஷின் 55 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் சுஸ்மிதா அன்புசெழியன் தயாரிக்க, சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘அமரன்’ பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

‘அமரன்’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனுஷுடன் கைகோர்த்திருப்பதால் இப்படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதோடு, சமூக வலைதளங்களில் இப்படம் பற்றி ரசிகர்கள் விவாதிக்க தொடங்கிவிட்டனர்.

இப்படம் குறித்து தயாரிப்பாளர் சுஸ்மிதா அன்புசெழியன் கூறுகையில், “தனுஷ் சார் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அற்புதமான திறமைமிக்க, இந்த இருவரின் கூட்டணியில், இப்படம் ஒரு தலைசிறந்த படைப்பாக இருக்கும்.” என்றார்.

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் தற்காலிக தலைப்பாக ‘டி55’ என்று வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், பூஜையுடன் தொடங்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி உள்ளிட்ட விபரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.

Comments are closed.