சென்னையில் வெள்ளத்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டபோது தனுஷ் குழு அமைத்து அனைவர்க்கும் உணவு, நிதியுதவி செய்தது நாம் அறிந்ததே.. இன்னும் பலருக்கு பலவிதமாக சத்தமில்லாமல் உதவி செய்துவருகிறார் தனுஷ். அந்தவகையில் தற்போது வறுமையால் கஷ்டப்படும் 125 விவசாய குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம், 65 லட்ச ரூபாய்க்கு விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி அவர்களை நெகிழ வைத்துள்ளார் தனுஷ்.
இந்த உதவியை செய்ய தனுஷுக்கு தூண்டுகோலாக இருந்ததது இயக்குனர் ராஜீவ் காந்தி மற்றும் இயக்குனர் சுப்பிரமணியம் சிவா இருவரும் தானாம். தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு முதல் நிகழ்ந்து கொண்டிருக்கும் விவசாயிகள் சாவுகளையும் விவசாயத்துக்கு ஏற்பட்டிருக்கும் இன்னல்களையும் விரிவாக கூறும் ஆவணபடம் ‘கொலை விளையும் நிலம்’. 50 நிமிடங்கள் ஓடிய இந்த ஆவணப்படத்தை இயக்கியவர் தான் இந்த ராஜீவ்காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.