“கால்பந்து வீரராக நடிக்க நான் ரெடி” – தனுஷ்..!

204

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டியின் விளம்பர தூதராக தனுஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளது, அவருக்கு மேலும் கிடைத்துள்ள புதிய அங்கீகாரம் ஆகும். எட்டு அணிகள் இடையிலான 2-வது இந்தியன் சூப்பர் லீக்) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் வருகிற 3-ஆம் தேதி முதல் டிசம்பர் 20-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. தனுஷ் இந்த கால்பந்து போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஆட்டத்தை பிரபலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளார்.

இதுபற்றி தனுஷ் கூறும்போது, “சிறு வயது முதலே நான் கால்பந்து ரசிகன். கால்பந்து ஆட்டங்களை ரசித்து பார்ப்பேன். சிறுவயதில் தெருக்களில் கால்பந்து விளையாடியும் இருக்கிறேன். ஐ.எஸ்.எல். போட்டி கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனதுடன் நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்த சீசன் கடந்த ஆண்டை விட விறுவிறுப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்.” என்றார். அதுமட்டுமல்ல புட்பாலை மையமாக வைத்து திரைப்படம் உருவானால் அதில் நடிக்கவும் தயாராக இருப்பதாக தனுஷ் கூறினார்.

Comments are closed.