‘இறைவி’ ரிலீஸுக்கு முன்னரே தனது கூட்டணியை தனுஷ் அறிவித்தது ஏன்..?

260

dhanush decision before iraivi
தொடர்ந்து தனது படங்களின் இயக்குனர்களை தனுஷ் தேர்ந்தெடுக்கும் விதமே அவரது படங்கள் எந்த அளவுக்கு குவாலிட்டியாக இருக்கும் என்பதை சொல்லாமல் சொல்லி வருகிறது.. பிரபுசாலமன், கௌதம் மேனன் என ஸ்டைலிஷான, ரசிகர்கள் அதிகம் விரும்பக்கூடிய இயக்குனர்களின் படங்களில் நடித்துவரும் தனுஷ், தான் அடுத்து கார்த்திக் சுப்புராஜ் டைரக்சனில் நடிக்க இருப்பதாக நேற்றே ஒரு செய்தியையும் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இரண்டே படங்களை இயக்கி இருந்தாலும் அவரது மூன்றாவது படத்திற்கே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தக்கூடிய ஹிட் லிஸ்ட்டில் இடம்பிடித்துவிட்டார். அவர் டைரக்சனில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள ‘இறைவி’ படம் வரும் வெள்ளி அன்று ரிலீஸாக இருக்கிறது..

இந்தநிலையில் அந்தப்படம் வெளியாகி அதன் ரிசல்ட் என்ன என்று தெரியும் முன்னரே அவரது அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக அறிவித்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.. தனுஷ் ‘இறைவி’யின் கதையை கேட்டு வியந்தார் என்றும், இல்லையில்லை அந்தப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் அவருக்கு திரையிட்டு காட்டினார் என்றும் அதைப்பார்த்து வியந்துபோன தனுஷ், உடனே தங்களது கூட்டணியை உறுதிப்படுத்தினார் என்றும் ஒருதரப்பினர் சொல்கிறார்கள்..

இன்னொரு தரப்பினரோ, அப்படியெல்லாம் இல்லை.. தனுஷ் இன்னும் ‘இறைவி’ படத்தை பார்க்கவில்லை.. அவருக்காக கார்த்திக் சுப்புராஜ் சொன்ன கதை பிடித்துப்போனது.. ‘இறைவி’ வெளியாகி அதன் ரிசல்ட் பாஸிடிவாக அல்லது நெகடிவ்வாக எப்படி இருந்தாலும் பரவாயில்லை, கார்த்திக்கின் டைரக்சனில் நடித்தே தீருவது என உறுதியாக இருந்ததால் தான் ‘இறைவி’ வெளியாகும் முன்பே தனது முடிவை அறிவித்துள்ளார் என்றும் கூறுகின்றனர்..

எது எப்படியோ தனுஷ் நல்ல முடிவையே எடுத்துள்ளார் என்று மட்டும் உறுதியாக சொல்லலாம்.

Comments are closed.