தெலுங்கு திரையுலகில் மிகப் பிரபலமான இயக்குநர் தாசரி நாராயணராவ் நேற்று இரவு காலமானார். தாசரி நாராயணராவுக்கு வயது 75. இயக்குனராக மட்டுமல்லாமல் திரைக்கதையாசிரியர், நடிகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகங்களைக்கொண்டவர். 151 படங்களை இயக்கி சாதனை புரிந்ததால், அதிக படங்களை இயக்கியவர் என்ற வேர்ல்டு ரெக்கார்ட் புக்கிலும் இடம்பிடித்தவர் தாசரி நாராயணராவ்.
மேலும் 53 படங்களைத் தயாரித்துள்ளார். கிட்டத்தட்ட 250-க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை-வசனம் எழுதியுள்ளார். தேசிய விருதுகள், ஃபிலிம்பேர் விருதுகள், ஒன்பது நந்தி விருதுகள், வாழ்நாள் சாதனையாளர் விருது என தாசரியின் விருதுப் பட்டியல் அவரது படங்களின் எண்ணிக்கையைப்போன்றே நீளமானது. இத்தனை திறமைகளையும் தாண்டி, அரசியலிலும் குதித்து, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நிலக்கரித் துறை இணை அமைச்சராகப் பொறுப்பும் வகித்தார்,
ரஜினி, கமல், அல்லு அர்ஜூன், நாகார்ஜூனா என முன்னணி திரைப்பட நட்சத்திரங்கள் தாசரியின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்துள்ளனர். இன்று மலை அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

Comments are closed.